திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 19 பிப்ரவரி 2024 (12:46 IST)

விஜயின் அரசியல் ஆட்டம் தொடங்கியது..! தமிழக வெற்றிக் கழகம் முக்கிய ஆலோசனை..!

Actor Vijay
தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்று வருகிறது.
 
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அவரின் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். 
 
அத்துடன், சென்னை பனையூரில் கட்சி நிர்வாகிகளை சந்தித்த விஜய், மக்கள் பணியை துரிதப்படுத்த வேண்டுமென்று அறிவுறுத்தினார். அத்துடன் அடிக்கடி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை வழங்கி வருகிறார்.
 
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உத்தரவின் பேரில், உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பது மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பாக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்  சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
 
Actor Vijay
பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற வரும் இந்த கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் கட்சியின் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.