வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 18 பிப்ரவரி 2024 (12:00 IST)

கட்சி உறுப்பினர் சேர்க்கை மற்ற வேலைகள் எப்போது? – நாளை நிர்வாகிகளை சந்திக்கும் நடிகர் விஜய்!

நடிகர் விஜய் புதிதாக “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை தொடங்கிய நிலையில் நாளை கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.



நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளதோடு “தமிழக வெற்றி கழகம்” என்று தனது கட்சியின் பெயரையும் அறிவித்தார். அதற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வந்த நிலையில் கட்சி பெயரில் “க்” எழுத்து பிழை ஏற்பட்டதும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் கட்சியின் பெயர் “தமிழக வெற்றிக் கழகம்” என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து கட்சி தொடங்குவதை அறிவித்து சில வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் முதன்முறையாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார் நடிகர் விஜய். இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நாளை (19.02.2024, திங்கட்கிழமை) காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளது. நமது கழகத்தின் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K