திங்கள், 20 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 18 பிப்ரவரி 2024 (08:47 IST)

கட்சியின் பெயரில் பிழை திருத்தம் செய்த விஜய்!

TVK
நடிகர் விஜய் தொடங்கிய புதிய அரசியல் கட்சியின் பெயரில் எழுத்துப்பிழை இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் அது தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது.



தமிழில் பிரபல நடிகரான விஜய் நெடுங்காலமாக அரசியலில் களமிறங்க ஆயத்தமாகி வந்த நிலையில் தற்போது “தமிழக வெற்றி கழகம்” என்ற கட்சியை தொடங்கியுள்ளார். அவர் கட்சி தொடங்கியுள்ளதற்கு பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். ஆனால் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் “க்” சேர்க்காமல் பிழையாக உள்ளதாக சிலர் சுட்டிக்காட்டியும் பேசி வந்தனர்.

இது விஜய்யின் கவனத்திற்கு சென்ற நிலையில் கட்சியின் பெயரை பிழையின்றி மாற்ற வேண்டும் என அவர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தற்போது எக்ஸ் தளத்தில் கட்சியின் பெயரில் “க்” சேர்க்கப்பட்டு “தமிழக வெற்றிக் கழகம்” என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K