1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. actor munar ramesh appreciated tvk vijay

ரஜினியை விட விஜய்க்கு தில்லு அதிகம்!.. நடிகர் மூணார் ரமேஷ் கருத்து....

rajini vijay
தமிழ் சினிமாவில் எம்ஜிஆருக்கு பின் அரசியலுக்கு வந்த சினிமா பிரபலங்களில் யாரும் பெரிய அளவுக்கு வெற்றியை பெறவில்லை. எம்ஜிஆருக்கு பின் சிவாஜி, கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், சரத்குமார் உள்ளிட்ட சிலர் கட்சி தொடங்கினார்கள் ஆனால் எடுபடவில்லை மக்கள் அவர்களை அதிகரிக்கவில்லை.. அதில் விஜயகாந்த மட்டுமே எதிர்கட்சி தலைவர் வரை முன்னேறினார்.

நடிகர் ரஜினி 25 வருடங்களாக நான் அரசியலுக்கு வருவேன்னு சொல்லி சொல்லி அவரின் ரசிகர்களை நம்ப வைத்தார்.  ஆனால் திடீரென தனது உடல் நிலையை காரணம் காட்டி அதிலிருந்து எஸ்கேப் ஆனார். ஆனால் ரசிகர்களால் தளபதி என்று அழைக்கப்படும் விஜய் கோட் படத்தில் நடித்த போது எனது அடுத்த படத்தை முடித்துவிட்டு நேரடி அரசியலுக்கு வருவேன் என அறிவித்தார். சொன்னது போலவே இப்போது அரசியலுக்கும் வந்துவிட்டார்..

இந்நிலையில் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் மூணார் ரமேஷ் விஜயின் அரசியல் பிரவேசம் பற்றி கருத்து தெரிவித்த போது ‘ரஜினி 20 வருடங்களாக அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தாரே தவிர வரவில்லை. ஆனால் ஜனநாயகன் எனது கடைசி படம் என்று சொல்லிவிட்டு விஜய் நேரடியாக கட்சி தொடங்கி களமிறங்கியிருக்கிறார்.. பல சவால்களை சமாளித்து இன்று ஒரு உறுதியான தலைவராக நிற்கிறார்’ என பாராட்டி பேசியிருக்கிறார்..
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
மார்ச் 8ம் தேதிக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கணும்!. ஸ்டாலின் போட்ட உத்தரவு!..