நீட் தேர்வை எதிர்த்து சட்டப்படி போராட்டம் - ஆனந்த்ராஜ் பேட்டி!
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு சட்டப்படி போராட்டம் நடத்த இருக்கிறேன் என நடிகர் ஆனந்த்ராஜ் பேட்டி.
மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என நேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்திருந்தார். இந்த தேர்வின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நீட் தேர்வு நடைபெறும் நகரங்களின் எண்ணிக்கையை 155-ல் இருந்து 296 உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஆண்டு 3182 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடந்த நிலையில் இந்த ஆண்டு கூடுதல் எண்ணிக்கையில் தேர்வு மையங்கள் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நீட் தேர்வை மத்திய அரசு நடத்தட்டும். தமிழ்நாடு அரசு சட்டப்படி எதிர்க்கட்டும். ஆனால் முடியை களைய சொல்லி, ஆடைகளை களைய சொல்லி மாணவ, மாணவிகளை தேர்வு எழுத சொல்வது சரியல்ல. இதற்காக சட்டப்படி போராட்டம் நடத்த இருக்கிறேன் என நடிகர் ஆனந்த்ராஜ் தெரிவித்துள்ளார்.