1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Rumours about NEET exam

செப்டம்பர் 5 ல் நீட் தேர்வா? சமூகவலைதளங்களில் பரவும் பொய்யான தகவல்!

Notice of NEET Entrance Exam Date
செப்டம்பர் 5 ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும்  என வெளியான தகவல்கள் பொய்யானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான நீட் நுழைவுத் தேர்வை அமல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இதற்கு எதிரான அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வந்தாலும்கூட வரும் நீட் தேர்விற்கு தயாராகும்படி மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.இந்நிலையில்  2021 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு செப்டம்பர் 5 ஆம் தேதி நேரடியாக நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் மாணவர்கள் தேர்வு தேதி அறிவித்த பின் இதற்கான தங்களைத் தயார் செய்ய தொடங்கிவிட்டனர்.

ஆனால் இவ்வாறு சமூகவலைதளங்களில் வெளியான தகவல் பொய்யானது என்றும் மார்பிங் செய்யப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது. இன்னும் நீட் தேர்வு குறித்து எந்த விதமான முடிவும் எடுக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
நிலுவையில் இருக்கும் திருமண உதவித் திட்டம்… விரைவில் அமல்படுத்தப்படும் என அமைச்சர் அறிவிப்பு!