செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 16 அக்டோபர் 2020 (17:24 IST)

நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு கடந்த மாதம் 13ம் தேதி நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரபரப்பிலும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தபோதிலும், மத்திய அரசு இந்த தேர்வை விடாப்பிடியாக நடத்தியது.

3,862 மையங்களில் நடந்த இந்த தேர்வை நாடு முழுவதிலும் இருந்து 15 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில், சுமார் 13 லட்சத்து 52 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வை எழுதியிருந்தனர் என்பதும், தமிழகத்தில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர் நீட் தேர்வை எழுதியிருந்தனர். இந்த நிலையில் சற்றுமுன் இந்த தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதனை www.ntaneet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.