நடிகர் அஜித்தின் வீடு எப்படி இருக்கும்... ? பிரபல நடிகர் ஓபன் டாக் !

ajith
sinoj kiyan| Last Modified வெள்ளி, 10 ஜனவரி 2020 (20:31 IST)
பிரபல வில்லன் நடிகர் ஆதித்யா மேனன், நடிகர் அஜித் வீட்டில் தொழில் நுட்பங்களால் நிறைந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.
பில்லா, அறிந்தும் அறியாமலும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளவர் ஆதித்யா மேனன். இவர், தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில்,  ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள தர்பார் படத்தில் டப்பிங் பேசி அசத்தியுள்ளார்.
 
இந்நிலையில் அவர் நடிகர் அஜித் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில், எனது நண்பர் ஒருவர் நடிகர் அஜித்தின் வீட்டை புதுப்பித்துக் கொடுத்துள்ளார்.
 
அப்போது அவர் என்னிடம், அஜித்தின் வீட்டில் உள்ள ஸ்கிரீன்கள் பேசினால் திறக்கக்கூடிய  ஆட்டோமைஸ்டு சிஸ்டம் செய்யப்பட்டுள்ளது. மேலும், வீட்டில் பைக் மற்றும் கார் ரேஸ் உள்ளிட்ட பல திறமைகளுக்குச் சொந்தக் காரர் அவர் என புகழ்ந்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :