உனக்கு எவன் எப்படி 50 கோடி சம்பளம் தரான்... விஜய்யை விளாசிய சர்ச்சை இயக்குனர்!

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 11 அக்டோபர் 2019 (11:54 IST)
சர்ச்சைக்குரிய படங்கள் சிலவற்றை எடுத்துள்ள இயக்குனர் சாமி நடிகர் விஜய்யை விமர்சித்து வெளியிட்டுள்ள வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
உயிர், மிருகம், சிந்துசமவெளி என்று சர்ச்சைகளுக்குரிய தமிழ் படங்களை இயக்கியவர் இயக்குனர் சாமி. இவர் திடீரென விஜய் குறித்து சர்சைக்குரிய வகையில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளது பின்வருமாறு, 
 
பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைத்தால் எல்லாம் சரியாக அமையும் என பேசியுள்ளார். இயற்கையும், கடவுளும் அவரவரை எங்கு வைக்க வேண்டுமோ அங்குதான் வைத்திருக்கிறது. 
நடிகர் ரஜினிகாந்த் போன்று நடிகர் விஜய் நடிப்பதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். மேடையில் கருத்து சொல்லி பெயரை கெடுத்துக்கொள்ள கூடாது. ஆனால், விஜய் உண்மையில் சிறந்த நடிகர், தனது பொது வாழ்க்கையில். 
 
ஆம், ரசிகர்களுடன் கைகுலுக்கிவிட்டு போட்டோ எடுத்துக்கொண்டு, பின்னர் டெட்டாய்ல் போட்டு அவர் கை கழுவுவதை நானே பார்த்துள்ளேன். படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடித்துவிட்டு செல்லுங்கள் தேவையில்லாததை பேசாதீர்கள். 
பின்னர் எந்த விதத்தில் 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறீர்கள்.  சம்பளத்தை கறுப்பு பணமாக வாங்கிக்கொண்டு சொத்து வாங்கிக் சேர்த்து வைக்கிறீர்கள். இன்னும் நீங்கள் எவ்வளவு நாள்தான் தமிழகத்தை ஏமாற்ற முடியும். ஒருநாள் உங்கள் சாயம் வெளுக்கும் என பேசியுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :