நடிகர் விஜய்யை அவதூறாக பேசிய நபர் மீது தாக்குதல் !
சென்னை புழல் அகதிகள் முகாமில் நடிகர் விஜய்யை பற்றி அவதூறாக பேசியதாக பேசிய நபர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அஜித் புழல் அகதி முகாமை சேர்ந்தவர் உமா சங்கர். இவர் அஜித் ரசிகர் .இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ரோஷன் என்பவர் விஜய் ரசிகர். இந்நிலையில் நடிகர் விஜய் குறித்து உமாசங்கர் தரக்குறைவாக பேசியுள்ளார் என தெரிகிறது.
இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக்கொண்டனர். அப்போது ஆவேசம் அடைந்த உமா சங்கரின் உடலில் பல பகுதிகளில் கத்தியால் வெட்டியதாகத் தெரிகிறது. இதனால் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்துவிழுந்தார் உமா சங்கர். பின்னர் அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் ரோஷனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.