புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 18 டிசம்பர் 2019 (16:40 IST)

பாம்பை தேடி ரெய்ட்... அலங்கோலமான அஜித்தின் திருவான்மியூர் வீடு?

நடிகர் அஜித்தின் வீட்டில் மலைப்பாம்பு வளர்க்கப்படுவதாக வனத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்குமாரின் வீடு திருவான்மியூரில் உள்ளது. இந்த வீட்டில்தான் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவும் தங்கியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் சுரேஷ் சந்திரா வீட்டில் மலைப்பாம்பை வளர்ப்பதாக தகவல் பரவியது. 
 
இந்த தகவலைத் தொடர்ந்து வனத்துறையினர் அஜித் வீட்டில் சோதனை நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த செய்தி உண்மையில்லை வெறும் வதந்தி எனவும் சில அதிகாரப்பூர்வ தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.