1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Active corona cases report under 10,000 in Chennai

சென்னையில் மெல்ல மெல்ல குறையும் கொரோனா எண்ணிக்கை அபாயம்!

சென்னை
கொரோனா சிகிச்சையில் உள்ளோர் சென்னை 9,868 பேர் மட்டுமே என தகவல் வெளியாகியுள்ளது. 
 
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை நேற்று தமிழகத்தில் 5325 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 557,999 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் தமிழகத்தில் 5363 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 502,740 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிப்பு அடைந்த 5325 பேர்களில் 980 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதோடு கொரோனா சிகிச்சையில் உள்ளோர் சென்னை 9,868 பேர் மட்டுமே எனவும் இதற்கு அடுத்தப்படியாக கோவையில் 4,630 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிபிடத்தக்கது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
ஆர்பாட்டத்தின் போது சூர்யா உருவ பொம்மை எரிப்பு: எல்லை மீறும் இந்து முன்னணி!