வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 24 செப்டம்பர் 2020 (12:48 IST)

நம்ம பிள்ளைங்க படிக்க கூடாதுன்னு பண்றாங்க! – உதயநிதி ஸ்டாலின்

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து பேசியுள்ள உதயநிதி ஸ்டாலின் மாணவர்கள் படித்துவிட கூடாது என்பதற்காகவே இந்த கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையையும், முக்கியமாக அதில் மூன்றாவது மொழியாக இந்தி கொண்டு வரப்படுவதையும் திமுக உள்ளிட்ட தமிழக எதிர்க்கட்சிகள் பலமாக எதிர்த்து வருகின்றன. ஆனால் மாணவர்கள் மூன்றாவது மொழி கற்றுக் கொள்வது அவசியம் என பாஜக தரப்பிலும் பலர் பேசி வருகின்றனர்.

இதுகுறித்து பேசியுள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் “முன்பெல்லாம் சமஸ்கிருதம் தெரிந்திருந்தால்தான் மருத்துவம் படிக்க முடியும் என சொல்வார்கள். இன்று எத்தனை மருத்துவர்கள் சமஸ்கிருதம் பேசுகிறார்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மூன்றாவது மொழி அவசியமற்ற ஒன்று எனவும், நம் வீட்டுப்பிள்ளைகல் படித்து விட கூடாது என்பதற்காகவே புதிய கல்விக்கொள்கையை கொண்டு வந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.