புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : சனி, 25 ஜூலை 2020 (20:55 IST)

அதிமுகவில் அதிரடி மாற்றம்… இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் முக்கிய அறிவிப்பு

அதிமுக நிர்வாகிகள் சிலரை  மாற்றம் செய்து தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த இசக்கி சுப்பையா அமைப்புச் செயலாளராக நியமனமிக்கப்பட்டுள்ளனார்.

முன்னாள் ஜெயலலிதா அதிமுகவின் பொதுச்செயலாராக இருந்தபோது அவ்வப்போது கட்சியில் சில அதிரடி மாற்றங்களை செய்வார்.

அதேபோல் தற்போது  ஓபிஎஸ், இபிஸ் இருவரின் தலைமையிலான அதிமுக கட்சியில் 29 புதிய புதிய கட்சி மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலர்களை நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஜெயலலிதா பேரவை, எம்ஜிஆர் இளைஞர் அணி, மகளிர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு நிர்வாகிகள் நியமனம் விவசாயப்பிரிவு, மருத்துவ அணி ஆகிய பொறுப்புகளுக்கும் நிர்வாகிகள் நியமனம் செய்து இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

 உள்கட்சியின் நிர்வாக வசதிக்காக அதிமுகவில் அமைப்பு ரீதியாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

தற்போது  அதிமுக அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்களையும் நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.