வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 6 ஜனவரி 2021 (16:40 IST)

விதிமீறும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை ... அமைச்சர் எச்சரிக்கை !

திரையரங்கில் 100% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ள நிலையில், அமைச்சர் உதயகுமார் , விதிமுறைகளை மீறும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சில தளர்வுகளின் அடிப்படையில் அரசு விதித்துள்ள வழிகாட்டு விதிமுறைகளின்படி திரையரங்குகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

ஆனால்,50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்ததால் சினிமாத்துறையினர் இதை 100% பார்வையாளர்களுக்கு அனுமதியளிக்க வேண்டுமெனக் கோரினர்.
 

இந்த நிலையில் விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் சிம்பு நடித்த ஈஸ்வரன் உள்ளிட்ட பெரிய படங்கள் வரவிருக்கும் நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று திரையுலகினர் கோரிக்கை விடுத்தனர்

இதுகுறித்து நடிகர் விஜய் முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

நேற்று நடிகர் அரவிந்த் சாமி  50% இருக்கைகளே போதுமென கூறினார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர் அரவிந்த் நாராயணம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் 100%  இருக்கைகளுக்கு அனுமதி என்பது தற்கொலைக்குச் சமம் என்று தனது ஃபேஸ்புக் பக்கதுதில் ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலயில், தியேட்டர்களில் 100% இருக்கைகளுக்கு அனுமதி குறித்து அமைச்சர் உதயகுமார் விதிமீறும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்,

இதுகுறித்து அவர்  கூறியுள்ளதாவது :

மருத்துவக்குழுவினர் அறிவுரையில் பேரிந்தான் தமிழகத்தில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் விதிமுறைகளை சரிவரக் கடைபிடிக்காத திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்  என எச்சரித்துள்ளார்.