செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 27 டிசம்பர் 2020 (10:31 IST)

சின்னத்தை முடக்க சதி; வாழ்வா சாவா நிலையில் அதிமுக! – அமைச்சர் எச்சரிக்கை!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில அதிமுக சின்னத்தை முடக்க சிலர் சதி செய்து வருவதாக அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. திமுக ஏற்கனவே தனது தேர்தல் பிரச்சார பணிகளை தொடங்கிவிட்ட நிலையில் அதிமுக இன்று முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் பேசியுள்ள அமைச்சர் சிவி சண்முகம் ”எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் முடக்க பலர் சதி செய்து வருகின்றனர். எனவே எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் அதிமுகவிற்கு வாழ்வா சாவா போராட்டமாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.