திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 28 டிசம்பர் 2020 (18:57 IST)

கார்களில் ஜாதிப் பெயர்கள்… கடுமையான நடவடிக்கை – போக்குவரத்து துறை அறிவிப்பு!

உத்தர பிரதேசத்தில் கார்களில் ஜாதிப் பெருமை பேசும் வசனங்கள் இருந்தால் பறிமுதல் செய்யவேண்டும் என போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டார்.

சமீபகாலமாக கார்களில் அல்லது இரு சக்கர வாகனங்களில் எழுதும் வாசகங்களில் சாதிப் பெருமை பேசுவது அதிகமாகியுள்ளது. இதனால் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் இதுபோல ஜாதி பெயர்களை போட்டுக் கொள்ளும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என அனைத்து ஆர் டி ஓ அலுவலகங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.