புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 15 அக்டோபர் 2018 (12:56 IST)

கணவரை பிரிந்து வாழும் பெண் மீது ஆசிட் வீச்சு: சேலத்தில் கொடூரம்

சேலத்தில் கணவனை பிரிந்து வாழும் பெண் மீது நபர் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சேலம் குகை லோகுசெட்டி தெருவை சேர்ந்த காயத்திரி(31). இவர் தன் கணவருடன் ஏற்பட்ட தகராறால், அவரை பிரிந்து தன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
 
அப்போது அவருக்கு சீனிவாசன் என்பவரோடு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த காயத்ரியின் பெற்றோர், அவரை கண்டித்துள்ளனர். இதனால் காயத்ரி சீனிவாசனுடனான தொடர்பை முற்றிலுமாக துண்டித்துள்ளார்.
 
ஆனால் சீனிவாசன் தொடர்ச்சியாக காயத்ரியை தொல்லை செய்து வந்துள்ளார். என்னிடம் பேசவில்லை என்றால் உன் மீது ஆசிட் வீசுவேன் என்றும் மிரட்டியுள்ளார். ஆனால் காயத்ரி இதனை கண்டுகொள்ளவில்லை.
 
இந்நிலையில் இன்று காலை காயத்ரி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த சீனிவாசன் காயத்ரி மீது ஆசிட் வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளார். படுகாயமடைந்த காயத்ரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீஸார் வழக்குப்பதிந்து தப்பியோடிய சீனிவாசனை தேடி வருகின்றனர். இச்சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.