புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 15 அக்டோபர் 2018 (09:15 IST)

மயக்க மருந்து கொடுத்து ஐ.டி பெண்ணை பலாத்காரம் செய்த சக ஊழியர்கள்

டெல்லியில் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்ணை அவருடன் பணிபுரியும் 2 பேர் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பெண்கள் மீதான பாலியல் வன்மங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது. நாளுக்கு நாள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாலியல் சீண்டல்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். 
 
டெல்லியில் ஐ.டி துறையில் வேலை பார்க்கும் பெண் ஒருவர் பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவருடன் வேலை செய்யும் சக ஊழியர்களான பிர்ஜு(25), வினோத் குமார்(31) ஆகிய இருவர் அந்த பெண்ணிற்கு லிப்ட் கொடுத்துள்ளனர்.
 
இருவரும் சேர்ந்து அந்த பெண்ணிற்கு மயக்க மருந்து கலந்த ஜூஸை கொடுத்துள்ளனர். இதனை குடித்த அந்த பெண் மயக்கமடையவே, இருவரும் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
 
இதனையடுத்து தனக்கு நேர்ந்த கொடுமைகளைப் பற்றி அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் அந்த இரண்டு அயோக்கியன்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.