1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 13 அக்டோபர் 2018 (14:24 IST)

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மீது அமெரிக்க பெண் பாலியல் குற்றச்சாட்டு...

இந்தியாவில் பிரதமர் நரேந்திரமோடி தலைமயிலான பா.ஜ.க.ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கட்சியின் மூத்த தலைவரும் வெளியுறவுத்துறை இணைஅமைச்சருமான எம்.ஜே .அக்பர் மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தபடி உள்ளன.
ஆனால் இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு எந்த பதிலும் கருத்துக்களும் இதுவரை பதிவு செய்யவில்லை என பலதரப்பிலிருந்தும் குரல் ஓங்கிவருகிறது.
 
இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த  பெண்பத்திரிக்கையாளர் ஒருவர் எம்.ஜெ.அக்பர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார்.
 
அவர் கூறியதாவது:
 
எனக்கு 18 வயது இருக்கும் போது நான் எம்.ஜெ.அக்பரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
 
இது நடந்தது 2007 ல் ஆசிய ஏஜ் செய்திதாளில் பணியார்றும் போது இந்த சம்பவம் நடந்ததாக அவர் கூறியுள்ளார்.அப்போது அக்பர் மூத்த பத்திரிக்கையாளராக இருந்தாஅர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இது குறித்து பா.ஜ.க தரப்பு தலைவர்கள் விளக்கம் அளிக்க முன் வரவில்லை.எனவே மத்திய அமைச்சரின் மீதான பாலியல் புகார் நாடுமுழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.