திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 14 அக்டோபர் 2018 (11:39 IST)

நீண்ட நாள் வாழ்வது கடவுளின் தண்டனை: 129 வயது பாட்டி பேச்சு

உலகின் வயதான பெண்மணியான கோபு என்ற 129 வயது பாட்டி, நீண்ட நாள் வாழ்வது கூட கடவுளின் தண்டனை தான் என கூறியுள்ளார்.
 
ரஷ்யாவை சேர்ந்த கோபு என்ற பெண்மணி 1889 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். 129 வயதாகும் இவர் உலகின் மிக வயதான பெண்மணி என அறிவிக்கப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில் கோபு இரண்டாம் உலகப்போரின் போது தான் ரஷ்யாவிலிருந்து வெளியேறி தலைமறைவாக இருந்ததாக கூறியுள்ளார். மேலும் நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுக்கும் தண்டனை தான் என அந்த பாட்டி கூறியுள்ளார்.