வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 13 அக்டோபர் 2018 (16:00 IST)

சென்னையில் 15 வயது பெண் பலாத்காரம் : இளைஞர் கைது

சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த 15 வயது பெண்ணுக்கு திருமண ஆசை காட்டி  பாலியல் பலாத்காரம் செய்ய இளைஞர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
சென்னையிலுள்ள திருவான்மியூரைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கு 15வயது மகள் உள்ளார். இவர் அருகே உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து முடித்து விட்டு வீட்டிலேயே இருந்துள்ளார்.
 
இந்நிலையில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக வீட்டருகே இருந்த கடைக்கு சென்று வரும் பொழுது அங்கே மளிகை கடையில் வேலை செய்து வரும் தியாகராஜனுடன்(24) அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
 
இந்தப் பழக்கம் கதலாகி பின் பல எல்லைமீறிய உறவாக வளர்ந்து வந்துள்ளது.
இது பற்றி யாருக்கும் தெரியாத நிலையில் இவர்கள் பழக்கம் தொடர்ந்து வந்துள்ளது.
இந்நிலையில் இளைஞர் அந்த பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை வன்புணர்வு செய்துள்ளார்.
 
நேற்று திடீரென்று வயிற்று வலி எடுக்கவே அருகில் உள்ள மருத்துவனைக்கு அவரது தாயார் கூட்டி சென்றுள்ளார் அப்போது தான் இவர் கர்ப்பமடைந்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து தனது கர்ப்பத்துக்கு தியாகராஜன் தான் காரணம் என்று கூறியுள்ளார் சிறுமி. 
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டு உடனடியாக இளைஞர் போக்சோ கைது செய்யப்பட்டார்.
 
இந்த பாலியல் விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரபை ஏற்படுத்தியுள்ளது.