1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 17 டிசம்பர் 2022 (11:27 IST)

நெய் விலையை தொடர்ந்து வெண்ணெய் விலையும் உயர்வு: ஆவின் நிர்வாகம் அறிவிப்பு

aavin butter
நெய் விலையை தொடர்ந்து வெண்ணை விலையும் உயர்வு: ஆவின் நிர்வாகம் அறிவிப்பு
ஆவின் நெய் விலை உயர்வு குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்த நிலையில் தற்போது ஆவின் வெண்ணெய் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
ஆவின் நெய் விலை லிட்டருக்கு 50 ரூபாய் உயர்த்துவதாக ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதனால் ஒரு லிட்டர் பிரிமியம் நெய் 630 ரூபாயில் இருந்து ரூ.680 என அதிகரித்தது.
 
கடந்த ஒன்பது மாதங்களில் மூன்று முறை ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது ஆவின் வெண்ணெய் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
500 கிராம் ஆவின் வெண்ணெய் 250 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அது 260 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் நெய் மற்றும் வெண்ணெய்  விலை உயர்வு பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 
Edited by Mahendran