1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : புதன், 23 நவம்பர் 2022 (13:38 IST)

ஆவின் மாதாந்திர அட்டையுடன் ரேஷன் அட்டையை இணைக்க உத்தரவு..

aavin
ஆவின் பால் பாக்கெட்டுகளுக்கான மாதாந்திர அட்டையை ரேஷன் அட்டையுடன் இணைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
ஆவின் நிறுவனம் வாயிலாக தினமும் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுவதாகவும், இந்த பால் கொழுப்பு சத்தை அடிப்படையில் பிரித்து விற்பனை செய்யப்படுவதாகவும் ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது
 
இந்த நிலையில் ஆரஞ்சு நிற பாக்கெட் பாலை சிலர் மாதாந்திர அட்டையில் வாங்கி வணிகரீதியாக விற்பனை செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து ஆவின் மாதாந்திர அட்டையுடன் ரேஷன் அட்டையை இணைக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது
 
இந்த பணி இணையதளம் மூலமாக 27 மண்டலங்களில் தற்போது நடைபெற்று வருவதாகவும் இதன் மூலம் முறைகேடுகள் தவிர்க்கப்படும் என்றும் ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran