ஆரஞ்சு நிற பாலை அதிகம் கொள்முதல் செய்ய அழுத்தம் கொடுக்கப்படுகிறதா? பால் முகவர்கள் குற்றச்சாட்டு
சமீபத்தில் விலை உயர்த்தப்பட்ட ஆரஞ்சு நிற பாலை அதிகம் கொள்முதல் செய்ய பால் முகவர்கள் அழுத்தம் கொடுக்கப்படுகிறார்கள் என பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி அவர்கள் குற்றம் சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீல நிறம் ,பச்சை நிறம், ஆரஞ்சு நிற பால் என மூன்று வகைகளில் சமீபத்தில் ஆரஞ்சு நிற பால் மட்டும் விலை உயர்த்தப்பட்டது. இருபத்தி ஐந்து ரூபாய் விற்பனையாகிக் கொண்டிருந்த ஆரஞ்சு நிறபால் தற்போது 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது
எனவே ஆரஞ்சு நிற பாலை வாங்கும் பல வாடிக்கையாளர்கள் தற்போது பச்சை மற்றும் நீல நிற பால்களை வாங்கி வருகின்றனர். இதனால் ஆரஞ்சு நிற பாலின் விற்பனை சரிந்துள்ளது
இந்த நிலையில் பால் முகவர்களை ஆரஞ்சு நிற பால் கொள்முதல் செய்ய ஆவின் நிர்வாகத்தால் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள் என பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி குற்றம்சாட்டி உள்ளார். மேலும் நீலம் மற்றும் பச்சை நிற பால் அதிகம் தேவைப்படும் நிலையில் பொது மக்களுக்கு போதுமான அளவு கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
Edited by Siva