வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (11:38 IST)

மீண்டும் வருகிறார் அமர்நாத் ராமகிருஷ்ணன்! – தமிழக தொல்லியல் ஆய்வாளர்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் கீழடி அகழ்வாய்வு பணிகளை முன்னெடுத்த அமர்நாத் ராமகிருஷ்ணன் மீண்டும் சென்னை தொல்லியல் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சரக தொல்லியல் துறை ஆய்வாளராக இருந்து வந்தவர் அமர்நாத் ராமகிருஷ்ணன். இவரது தலைமையில்தான் கீழடி அகழ்வாய்வுகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு பல பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் முன்னதாக அவர் கோவா தொல்லியல் சரகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.

தற்போது அவரை மீண்டும் சென்னை சரகத்திற்கு இடமாற்றம் செய்து உத்தரவு வெளியாகியுள்ளது. இதற்கு தமிழக தொல்லியல் ஆய்வாளர்கள் பலர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மதுரை எம்.பி சு.வெங்கடேசன், அமர்நாத் மறுவருகைக்கு தன் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.