3 வயது குழந்தையை கிணற்றில் தள்ளிய சிறுவர்கள்! – சிவகாசியில் அதிர்ச்சி சம்பவம்!

drowning
Prasanth Karthick| Last Modified செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (10:11 IST)
சிவகாசியில் விளையாட்டில் நேர்ந்த சண்டையால் குழந்தையை சிறுவர்கள் கிணற்றில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி அருகே விஸ்வநத்தம் பகுதியில் மூன்று வயது சிறுவன் கிணற்றில் தள்ளி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று வயது சிறுவனுடன் 13 மற்றும் 11 வயதுடைய இரண்டு சிறுவர்களும் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களிடையே விளையாடுவதில் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிறுவர்கள் மூன்று வயது சிறுவனை கிணற்றில் தள்ளிவிட்டதால் மூன்று வயது சிறுவன் உயிரிழந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து 13 மற்றும் 11 வயதுடைய சிறுவர்களை விசாரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :