தமிழகத்தில் பல்வேறு போராட்ட வழக்குகள் வாபஸ்! – அரசாணை வெளியீடு!

TN assembly
Prasanth Karthick| Last Modified செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (10:21 IST)
தமிழ்நாட்டில் மீத்தேன், எட்டுவழிசாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு எதிராக போராடியதற்காக தொடுக்கப்பட்ட வழக்குகளை திரும்ப பெற்றதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் எட்டுவழி சாலை, மீத்தேன், கூடங்குளம் அணு உலை, வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு சார்பில் வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் சமீபத்தில் இந்த வழக்குகளை அரசு வாபஸ் பெறுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியவர்கள் மீது தொடுக்கப்பட்ட 5570 வழக்குகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :