திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 25 நவம்பர் 2022 (17:43 IST)

ஆதார் இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த முடியுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!

Senthil Balaji
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் அட்டை எண்ணை இணைக்க வேண்டும் என்றும் மின் அட்டையுடன் ஆதார் அட்டை இணைத்தால் மட்டுமே மின்கட்டணம் செலுத்த முடியும் என்றும் செய்திகள் வெளியானது. 
 
இதனை அடுத்து பலர் மின்சார அலுவலகம் சென்று மின் அட்டை எண்ணுடன் ஆதார் அட்டை எண்ணை இணைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆதார் எண் இணைக்காவிட்டாலும் மின் கட்டணம் செலுத்தலாம் என்றும் ஆனால் கண்டிப்பாக மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்
 
இதனை அடுத்து மின் கட்டணம் செலுத்திவிட்டு அதன் பிறகு ஆதார் எண்ணை இணைக்க லாம் என்பது பொதுமக்கள் கூறப்படும் செய்தியாக உள்ளது
 
இருப்பினும் ஆதார் எண் மற்றும் மின் இணைப்பு எண் இணைப்புக்கு திமுக கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பதும் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran