1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Barcode in tasmac products says minister senthil balaji

டாஸ்மாக் மதுபானங்களில் பார்கோடு : அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

Senthil Balaji
டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களில் விரைவில் பார்கோடு அமைக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
டாஸ்மாக் தயாரிக்கும் மதுபானங்கள் மீது விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளதை அடுத்து இதன்மூலம் விற்பனையை மிகவும் சரியாக அறிந்து கொள்ள முடியும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்
 
மேலும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் கணினிமயமாக்கப்பட்ட உள்ளதாகவும் அவர் கூறினார். டாஸ்மாக் கடைகளில் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்
 
டாஸ்மாக் கடைகளில் வசூலாகும் பணத்தை பாதுகாப்பாக வைக்க அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் லாக்கர்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
சிறையில் இருந்து தப்பித்த குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை: 2 பேர் பலி