வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 25 நவம்பர் 2022 (11:13 IST)

ஆதார் - மின் இணைப்பு இணைக்க 2 நாட்கள் கூடுதல் அவகாசம் அளிப்பு!

aadhar eb
ஆதார் - மின் இணைப்பு இணைக்க 2 நாட்கள் கூடுதல் அவகாசம் அளிப்பு!
மின் இணைப்புடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என தமிழக அரசின் மின்சார வாரியம் கூறி வந்த நிலையில் தற்போது இரண்டு நாட்கள் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
மின் இணைப்புடன் ஆதார் அட்டை இணைக்கப்பட்டால் மட்டுமே மின் கட்டணம் கட்ட முடியும் என மின்சார வாரியம் தெரிவித்ததாக தகவல் வெளியானது.
 
இதனை அடுத்து ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க நுகர்வோருக்கு கூடுதல் அவகாசம் அளித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 
நவம்பர் 24 முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்துவோருக்கு இரண்டு நாட்கள் கூடுதலாக அவகாசம் அளிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
 
Edited by Siva