வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 24 நவம்பர் 2022 (11:49 IST)

மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது எப்படி? வீட்டிலிருந்தே செய்யலாம்!

தமிழ்நாடு மின்சார வாரியம் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கியுள்ள நிலையில் அதுகுறித்து பார்ப்போம்.

தமிழ்நாடு மின்சார வாரிய மின்கணக்குகளில் ஆதார் எண்ணை இணைக்கும் அறிவிப்பை சமீபத்தில் தமிழக மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். அதை தொடர்ந்து ஆதார் எண் இணைப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. உங்களிடம் கணினி இருந்தால் வீட்டில் இருந்தே இந்த இணைப்பை மேற்கொள்ள முடியும்

முதலில் நீங்கள் இணைக்க வேண்டிய மின் இணைப்பு அட்டை மற்றும் ஆதார் அட்டையை புகைப்படம் எடுத்து 300 கே.பி அளவுக்குள் உள்ள பைலாக சேவ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

மின்சார வாரியத்தின் இணையதளமான www.tangedco.gov.in மற்றும் https://adhar.tnebltd.org/adharupload/ என்ற வலைதளத்தில் செல்ல வேண்டும்

அதில் மின் இணைப்பு எண் மற்றும் செல்போன் ஆகியவற்றை பதிவிட்டால் மொபைல் எண்ணுக்கு ஓடிபி எண் வரும். அதை பதிவிட வேண்டும்.

பின்னர் தோன்றும் திரையில் உரிமையாளரின் பெயர் மற்றும் விவரங்களை நிரப்ப வேண்டும். இணைக்கப்படும் ஆதார் எண் வீட்டின் உரிமையாளருடையதா, வாடகைதாரருடையதா என்ற ஆப்சனில் ஒன்றை க்ளிக் செய்ய வேண்டும்.

பின்னர் ஆதார் எண்ணையும் , ஆதார் எண்ணில் உள்ளபடி பெயரையும் பதிவு செய்ய வேண்டும்.

சான்றுக்கு ஆதார் அட்டையின் 300 கே.பி அளவுள்ள புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும்.

பின்னர் அனைத்து தகவல்களும் சரியாக இருக்கிறதா என பரிசோதித்துக் கொண்டு சப்மிட் செய்ய வேண்டும். உங்கள் ஆதார் எண் சமர்பிக்கப்பட்டது என சப்மிட் ஆனபின் திரையில் தோன்றும்.

Edit By Prasanth.K