தொடர்புடைய செய்திகள்
- கரகாட்டப் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர்கள்!!!
- முதியவருடன் உல்லாசம்: ஐஸ்கிரீம் கடையில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!!
- வாக்குச்சாவடியை கைப்பற்ற தூண்டும்படி பேசிய அன்புமணி ராமதாஸ் : வலுக்கும் எதிர்ப்புகள்
- காரை நிறுத்தாமல் சென்ற டிடிவி: போலீஸின் அதிரடி நடவடிக்கை!!!
- வட்டிக்கு பணம் கொடுத்து மாட்டிக்கொண்டோம்: குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட முதியவர்!!!
இளம் ஆசிரியைக்கு வாக்குச்சாவடியில் ஏற்பட்ட விபரீதம்!!!
சேலத்தில் வாக்குச்சாவடி பயிற்சி முகாமில் மயங்கி விழுந்த ஆசிரியை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டம்னற இடைத்தேர்தல் நெருங்க இன்னும் சில நாட்களே உள்ளது. பல்வேறு கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
மறுபுறம் தேர்தலை நடத்த அரசு ஊழியர்களுக்கு சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழகமெங்கிலும் உள்ள அரசு ஊழியர்கள் தேர்தல் மையங்களில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்படி நேற்று சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் தேவனூர் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த நித்யா என்ற இளம் ஆசிரியை பயிற்சி முகாமில் கலந்து கொண்டார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக நித்யா அருகிலிருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
