வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 6 ஏப்ரல் 2019 (15:57 IST)

முதியவருடன் உல்லாசம்: ஐஸ்கிரீம் கடையில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!!

சேலத்தில் இளம்பெண்ணின் தகாத உறவால் அவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த ஷரீன் சித்தா என்ற இளம்பெண் அதே பகுதியில் ஒரு ஐஸ்கிரீம் கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. 
 
இந்நிலையில் ஷரீன் சித்தாவுக்கு இனாமுல்லா என்ற முதியவர் ஒருவருடன் தகாத உறவு இருந்து வந்ததாக தெரிகிறது. இதையறிந்த ஷ்ரீன் வீட்டார் அவரை கடுமையாக கண்டித்துள்ளனர். அதனால் ஷரீன் இனாமுல்லாவுடன் பழகுவதை நிறுத்தியுள்ளார்.
 
இதனால் கோபமடைந்த இனாமுல்லா ஷரீன் வேலை செய்யும் ஐஸ்கிரீம் கடைக்கு சென்று தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிப்போய் இனாமுல்லா ஷரீனை குத்தி கொலை செய்துள்ளார். அந்நேரம் கடையில் யாரும் இல்லாததால் ஷரீனை யாரும் காப்பாற்ற முடியவில்லை. பின்னர் இனாமுல்லாவும் அதே கடையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.