ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 22 மே 2018 (13:18 IST)

ஆசைக்கு இணங்க மறுத்த பெண் - போட்டுத்தள்ளிய விஜயபாஸ்கர் மாமனாரின் கார் டிரைவர்

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மாமனாரின் கார் டிரைவர், ஒரு பெண்ணை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ராமநாதபுரம், ராமலிங்கஜோதி நகரை சேர்ந்தவர் ஜெயந்தி(35). இவர் அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் வேலை செய்து வந்தார்.
 
இந்நிலையில் கடந்த 17-ந் தேதி, வெளிநாட்டில் இருக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மாமனார் சுந்தரம், கோவை என்.என்.வி. கார்டனில் உள்ள தனது வீட்டை சுத்தம் செய்து வைக்கும் படி, தனது டிரைவரான திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த மணிவேலிடம் கூறியுள்ளார்.
 
இதனையடுத்து மணிவேல், ஜெயந்தியை அழைத்து வீட்டை சுத்தம் செய்யும்படி கூறியுள்ளார். அதன்படி ஜெயந்தி சுந்தரத்தின் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது மணிவேல் ஜெயந்தியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.
 
இதனால் ஜெயந்தி மணிவேலை கடுமையாக திட்டியுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த மணிவேல் ஜெயந்தி கழுத்தை நெரித்து கொலை செய்து பிணத்தை சாக்கடையில் வீசிவிட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் சிங்காநல்லூர் குளத்தேரி பகுதியில் சாக்கடைக்குள் பிணம் இருப்பதாக சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
 
விசாரணையில் அது ஜெயந்தியின் உடல் எனத் தெரிய வந்தது. விசாரணையை துரிதப்படுத்திய போலீஸார், ஜெயந்தியின் செல்போன் அழைப்புகளை வைத்து விசாரித்ததில், மணிவேல் சிக்கிக்கொண்டார். வழக்கு பதிந்துள்ள போலீஸார், மணிவேலிடம் தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.