செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 27 அக்டோபர் 2018 (12:03 IST)

அடுத்த முதல்வர் யார்? - கருத்துகணிப்பில் புதிய தகவல்

தமிழகத்தில் அடுத்த ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது பற்றி கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. 

 
பெரிதும் எதிர்பார்க்கபப்ட்ட 18 எம்.ஏல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில்  தினகரனுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியாகியிருந்தால் தமிழக அரசியலில் பல அதிரடி திருப்பங்கள் மற்றும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும் என கருதப்பட்டது. ஆனால், ஆளும் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வெளியாகியுள்ளது. இன்னும் சில மாதங்களில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தெரிகிறது.
 
இந்நிலையில், தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், அடுத்து யார் முதல்வராக பதவியேற்பார் என இந்தியா டுடோ, ஆக்சிஸ் மை இந்தியா மற்றும் பி.எஸ்.இ ஆகியவை இணைந்து 30 பாராளுமன்ற தொகுதிகளில் மொத்தம் 14, 820 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. 
 
அதன்படி
 
திமுக - ஸ்டாலின் - 41 சதவீதம்
அ.தி.மு.க. -பழனிசாமி - 10 சதவீதம்
மக்கள் நீதி மய்யம் -கமல்ஹாசன் - 8 சதவீதம்
பா.ம.க. - அன்புமணி -  7 சதவீதம்
ரஜினி மக்கள் மன்றம் - ரஜினிகாந்த் - 6 சதவீதம்
அதிமுக - பன்னீர்செல்வம் - 6 சதவீதம்
அ.ம.மு.க. - தினகரன் - 6 சதவீதம்
தே.மு.தி.க. - விஜயகாந்த் - 5 சதவீதம்
 
என கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. 
 
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசின் மீது அதிருப்தியில் இருப்பதாக 54 சதவீத மக்கள் கூறியுள்ளனர். அதேபோல் 18 சதவீதம் பேர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி திருப்தி எனவும் கூறியுள்ளனர்.