செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 10 டிசம்பர் 2018 (12:12 IST)

பலபேருடன் உல்லாசம்: தடையாய் இருந்த கணவனை துடிதுடிக்க கொலை செய்த மனைவி

பலபேருடன் முறையற்ற உறவு வைத்திருந்த பெண் ஒருவர் தனது கணவனை கூலிப்படை ஏவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜம்புகுட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவரது மனைவி சோனியா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கணவன் வெளியே செல்லும் நேரத்தில் சோனியா பல ஆண்களை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார்.
 
இதனையறிந்த ராஜலிங்கம் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கிடையே அவ்வபோது சண்டை இருந்து வந்துள்ளது.
 
கணவன் உயிரோடு இருந்தால் கள்ளக்காதலை தொடர முடியாது என நினைத்த சோனியா கணவனை கொல்ல திட்டமிட்டார். கூலிப்படையை ஏவி கணவனின் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்தார் சோனியா. பின்னர் அவரின் சடலத்தை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்துகொண்டார் என அக்கம்பக்கத்தினரை நம்ப வைத்தார்.
 
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் ராஜலிங்கத்தின் உடலை மீட்டனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாய் ராஜலிங்கத்தின் மகன் தன் தந்தை கொலை செய்யப்பட்டதை போலீஸில் கூறினான். இதனை எதிர்பாராத சோனியா அதிர்ச்சியில் உறைந்தார்.
 
இதனையடுத்து போலீஸார் சோனியாவையும் அந்த கூலிப்படையினரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.