சகோதரர் மனைவி மீது மோகம்: விஷால் செய்த கேவலமான காரியம்

Last Updated: சனி, 8 டிசம்பர் 2018 (11:13 IST)
உத்திரப்பிரதேச மாநிலத்தில் அண்ணன் - தம்பி இருவரும் தங்களுக்குள் தங்களது மனைவியை மாற்றிக்கொள்ள முடிவு செய்து ஒரு உயிரை பலியாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
உத்திரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தை சேர்ந்த அண்ணன் தம்பிகள் விஷால் மற்றும் யோகேந்திரா. இருவருக்கும் திருமணமாகிவிட்டது. விஷாலின் மனைவி லட்சுமி. யோகேந்திராவின் மனைவி சோனு. 
 
அண்ணன் விஷாலுக்கு தம்பியின் மனைவி சோனுவின் மீது ஆசை. அதேபோல், தம்பி யோகேந்திராவுக்கு அண்ணன் மனைவி லட்சுமி மீது ஆசை. இதனால் இருவரும் மனைவிகளை மாற்றிக்கொள்ள முடிவு செய்தனர். 
 
ஆனால், இதற்கு அண்ணன் விஷாலின் மனைவி லட்சுமி ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விஷால், சோனு தனக்கு கிடைக்காமல் போய்விடுவாலோ என்ர விரக்தியில் தம்பியுடன் சேர்ந்து லட்சுமியை கொலை செய்தார். 
 
இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீஸார் அண்ணன் - தம்பி இருவரையும் கைது செய்துள்ளனர். 


இதில் மேலும் படிக்கவும் :