2வது திருமணம் செய்த விஜய்! மனைவி பரபரப்பு புகார்

VM| Last Updated: சனி, 8 டிசம்பர் 2018 (10:30 IST)
கன்னட நடிகர் துனியா விஜய் மனைவியை விவாகரத்து செய்யாமல் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இது தொடர்பாக அவரது முதல் மனைவி நாகரத்னா போலீசில் புகார் அளித்துள்ளார். 
பிரபல கன்னட நடிகர் துனியா விஜய். இவருக்கு நாகரத்னா என்ற மனைவியும் மோனிகா என்ற 19 வயது மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2016-ல் கீர்த்தி என்பவரை காதலித்து 2-வது திருமணம் செய்து அவருடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். இதனால் கீர்த்தியை, துனியா விஜயின் முதல் மனைவி நாகரத்னா மற்றும் அவரது மகள் ஆகியோர் வீடு புகுந்து அடித்து உதைத்தாக கூறப்படுகிறது.  கீர்த்தியும், நாகரத்னாவும் தலைமுடியை பிடித்து ஆவேசமாக சண்டை போட்ட சம்பவம், நாளிதழ்களில் செய்திகளாகவும் வெளியானது. இந்த சண்டையில் காயம் ஏற்பட்டதாக கூறி, போலீசில் துனியா விஜய்யின் 2வது மனைவி கீர்த்தி புகார் செய்தார். இதற்கிடையில் சித்தியை ஏன் அடித்தாய் என  தனது மகள் மோனிகாவை துனியா விஜய் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் துனியா விஜய் மீது மோனிகா போலீசில் புகார் அளித்தார்.


 
இதனால் துனியா விஜய் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது.  இந்த நிலையில் மகளிர் கமிஷனில் துனியா விஜய் மீது முதல் மனைவி நாகரத்னா புகார் அளித்துள்ளார். “என்னை விவாகரத்து செய்யாமல் துனியா விஜய் 2-வது திருமணம் செய்தது தவறு. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளார். இதனால் துனியா விஜய்க்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :