செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 24 டிசம்பர் 2018 (11:37 IST)

பாத்ரூமுக்குள் பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியரின் வெறிச்செயல்

திருவள்ளூரில் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் 9ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் பல மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் 9 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளி முடிந்ததும், பாத்ரூமிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த மாணவியை பின்தொடர்ந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அந்த மாணவிக்கு பாத்ரூமில் வைத்து பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் எனவும் அந்த மாணவியை மிரட்டியுள்ளான் தலைமை ஆசிரியர்.
 
இதனையடுத்து மாணவி தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். பதறிப்போன அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, போலீஸார் அந்த அயோக்கியனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.