செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 21 டிசம்பர் 2018 (17:44 IST)

மெரீனாவில் 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! குதிரை இயக்குபவர் மீது போக்சோ

சென்னை மெரீனாவில் அவ்வப்போது சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் பாலியல் வன்கொடுமை நடந்து வருவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை மெரினாவில் 13 வயது சிறுமி ஒருவருக்கு அங்கு குதிரையை இயக்கி வரும் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தனது தோழியுடன் மெரினா கடற்கரைக்கு சென்ற போது 13 வயது சிறுமியான தங்கள் மகளை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியதாக அந்த சிறுமியின் பெற்றோர் போலீசில்  புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து6+ போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் மெரினாவில் குதிரை இயக்குபவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.