1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 21 டிசம்பர் 2018 (11:21 IST)

அனைத்து டீ கடன்களும் தள்ளுபடி: நீங்க தான் செய்யல நாங்க செய்யுறோம்!!

கஜா புயல் எதிரொலியாக டீக்கடை உரிமையாளர் ஒருவர் தன் கடையில் கஸ்டமர்கள் வைத்துள்ள கடன்களை தள்ளுபடி செய்துள்ளார்.

 
கடந்த மாதம் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட கஜா புயல் அந்த மக்களை நிலைகுலைய செய்துள்ளது. இந்த அந்த பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு டீக்கடை உரிமையாளர் தங்கள் கடையில் கஜா புயலுக்கு முன்பால வாடிக்கையாளர்கள் வைத்திருந்த அனைத்து டீக்கடன்களையும் தள்ளுபடி செய்வதாக போஸ்டர் அடித்து கடையில் ஒட்டியுள்ளார். தமிழக அரசு நிவாரண உதவி கேட்டால் பிச்சை போடுவது போல தரம் தாழ்ந்து நடந்து கொண்டிருக்கிறது மத்திய அரசு.
 
இந்த டீக்கடை உரிமையாளரின் செயல் பலரின் பாராட்டை பெற்று வருகிறது.