1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 20 டிசம்பர் 2018 (12:36 IST)

இரண்டு வாரத்தில் கஜா நிவாரணம் – மத்திய அரசு வழக்கறிஞர் தகவல்

மத்திய அரசு இன்னும் 2 வாரத்தில் கஜா புயல் பாதித்த மக்களுக்கு நிவாரணம் வழங்கும் என மத்திய அரசு வழக்கறிஞர் சென்னை ஐகோர்ட் கிளையில் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 16 ஆம் தேதி தமிழக்த்தில் வீசிய கஜாப் புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, கரூர், திருச்சி  ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அந்த மாவட்ட  மக்கள் தங்கள் வீடு, பயிர்கள் மற்றும் கால்நடை என அனைத்து வாழ்வாதாரங்களையும் இழந்து வாடுகின்றனர்.

புயல் பாதித்த மக்களுக்கு இன்னும் நிவாரணம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றனர். இதற்கு மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்காததே காரணம் என மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், புயல் பாதிப்புகளுக்கான பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரணத் தொகையை உயர்த்தி உடனடியாக வழங்க வேண்டும், இந்தப் புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. புயல் சேதம் 6000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான வழக்கில் மத்திய அரசு வழக்கறிஞர்களிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் ‘ புயல் பாதிப்புக்கு மத்திய அரசு ஏன் இன்னும் முழுமையான உதவிகளை வழங்கவில்லை எனக் கேட்டனர். அதற்குப் பதிலளித்த வழக்கறிஞர்கள் ‘சில சந்தேகங்களை தமிழக அரசிடம் கேட்டுள்ளதாகவும், அதற்கு இன்னும் பதில் வரவில்லை’ எனப் பதிலளித்தனர். இதற்குப் பதிலளித்த தமிழக வழக்கறிஞர் ’மத்திய குழுவின் சந்தேகங்கள் தொடர்பாக இன்றே விளக்கங்கள் அனுப்பப்படும்’ என  தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நேற்று விசாரணைக்கு வந்த வழக்கில் மத்திய அரசு இன்னும் போதுமான விவரங்கள் கைக்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டை முனவைத்தனர். அதற்குப் பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர் தகவல்கள் அனுப்பப்பட்டு விட்டன. அவை இன்று (நேற்று) மதியத்துக்குள் மத்திய அரசு கைக்கு கிடைக்கும் எனப் பதிலளித்தனர். அதற்குப் பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர் விவரங்கள் கிடைத்த 2 நாட்களுக்குள் மத்திய அரசு நிவாரணத்தொகையை அறிவிக்கும் எனக் கூறினார்.

இந்நிலையில் இன்று மத்திய அரசு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்னும் 2 வாரத்தில் மத்திய அரசு நிவாரணத்தொகையை வழங்கும் என அறிவித்துள்ளார்.