சென்னைக்கு வந்தது 83.28 மெட்ரிக் டன் ஆக்சிஜன்!
கொரோனா வைரஸால் பாதிப்பு அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடன் முதலில் அவர்களுக்கு ஆக்சிஜன் அளவு சரி பார்த்து ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்தால் ஆக்ஸிஜன் ஏற்றப்படுகிறது
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாகவும் பிற மாநிலங்களிலிருந்து ஆக்சிஜன் வரத்து அதிகரித்ததன் காரணமாகவும் தற்போது ஆக்சிஜன் ஓரளவுக்கு தட்டுப்பாடு இல்லாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஒரிசா மாநிலத்தில் இருந்து நான்கு கண்டெய்னர்களில் 83.28 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சென்னைக்கு வந்துள்ளது. ஒரிசாவில் இருந்து சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு இந்த ஆக்சிஜன் வந்ததை அடுத்து ஆக்சிஜனை மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் பிரித்துக் கொடுக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இதுவரை 2098.32 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சிறப்பு ரயில்கள் மூலம் பல்வேறு மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.