செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 31 மே 2021 (20:22 IST)

சென்னையை அடுத்து கோவையிலும் குறைந்து வரும் கொரோனா!

கடந்த சில நாட்களாக சென்னையை விட கோவையில் அதிகமாக கொரோனா பாதிப்பு இருந்து வந்த நிலையில் தற்போது சென்னையைப் போலவே கோவையிலும் பாதிப்பு குறைந்து வருகிறது. 
 
மே 27-ஆம் தேதி அதிகபட்சமாக கோவையில் 4,734 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை அடுத்து மே 28, மே 29, மே 30 மற்றும் இன்று மே 31 ஆகிய நாட்களில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு கோவையில் குறைந்து வருகிறது.
 
இன்று கோவையில் 3,488 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மே 19 ஆம் தேதியில் இருந்து இன்று வரை கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து தற்போது பார்ப்போம்.
 
 
31 மே: 3,488
30 மே: 3,537
29 மே: 3,692
28 மே: 3,937
27 மே: 4,734 (அதிகபட்சம்)*
26 மே: 4,268
25 மே: 3,632
24 மே: 4,277
23 மே: 3,944
22 மே: 3,165
21 மே: 3,243
20 மே: 3,335
19 மே: 3,250