மும்பையில் இருந்து சென்னைக்கு வந்த 2 லட்சம் தடுப்பூசிகள்: ஆனால் அதிலும் ஒரு சிக்கல்!
தமிழகத்தில் தற்போது ஸ்டாக் உள்ள தடுப்பூசிகள் இன்னும் 2 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்றும் அதற்குள் மத்திய அரசிடமிருந்து தடுப்பூசிகள் வரவில்லை என்றால் தடுப்பூசி போடும் பணியை நிறுத்த வேண்டிய அபாயம் இருப்பதாகவும் இன்று மாலை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த நிலையில் மத்திய அரசிடமிருந்து ஜூன் 6ஆம் தேதி தான் தடுப்பூசிகள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் ஓரிரு நாட்கள் தடுப்பூசி போடும் பணி நிறுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது
இந்த நிலையில் சற்று முன்னர் மும்பையில் இருந்து இரண்டு லட்சம் தடுப்பூசிகள் சென்னைக்கு விமானம் மூலம் வந்துள்ளன. ஆனால் இந்த தடுப்பூசிகள் அனைத்தும் தனியார் மருத்துவமனைக்கு செல்வதாகவும் அரசு மருத்துவமனைகளுக்கு உரிய தடுப்பூசிகள் இல்லை என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஏழை எளிய மக்கள் போடுவதற்கு வசதியாக அரசு மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி அனுப்பாமல் மத்திய அரசு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளதற்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது