தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் நள்ளிரவில் திடீர் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!
- இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சென்னையில் இன்றைய விலை என்ன?
- இன்று முதல் மளிகை பொருட்கள் வாங்க மொபைல் எண்கள்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
- தமிழகத்தில் இன்று 29 ஆயிரத்திற்கும் குறைந்த கொரோனா பாதிப்பு!
- மேலும் ஒரு பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார்: விசாரணைக்கு ஆஜராக உத்தரவு!
மீண்டும் ரூ.37,000-த்தை கடந்த தங்கம் விலை!
ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கத்தின் விலை வாரத்தின் முதல் நாளான இன்று அதிகரித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனிடையே இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
தங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடனே தொடங்கி உள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,628 விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 17 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 136 உயர்ந்து ரூ.37,024-க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலை சற்று உயர்ந்து காணப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 0.60 விலை உயர்ந்து ரூ.76.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
