செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 5 நவம்பர் 2018 (12:57 IST)

சூதுகவ்வும் பட பாணியில் நடந்த சம்பவம்: நெல்லையில் ருசிகரம்

நெல்லையில் சூதுகவ்வும்பட பாணியில் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூதுகவ்வும் படத்தில், நடிகர் கருணாகரன் தனது தந்தையிடம் இருந்து பணம் பறிக்க கடத்தல் நாடகத்தை அரங்கேற்றுவார்.  இந்த படத்தில் வரும் ஐடியாவை வைத்து நபர் ஒருவர் தனது தந்தையிடம் இருந்து 30 லட்சத்தை திருடியுள்ளார்.
 
நெல்லை மாவட்டம் தென்காசியில், முகமது தாகா என்பவர் தனது நகைக்கடையில், வேலை செய்யும் பாலசுப்பிரமணியன் என்பவரிடம் 30 லட்சம் ரூபாயை கொடுத்து அதனை சென்னையில் உள்ள தனது மகனிடம் கொடுத்து நகைகளை வாங்கி வரும்படி கூறியுள்ளார்.
 
பேருந்தில் சென்னைக்கு புறப்பட்ட பாலசுப்ரமணியம், கொள்ளையர்கள் தன்னிடம் பணத்தை பறித்துவிட்டு சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
 
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் பல உண்மைகள் அம்பலமானது. நகை கடை உரிமையாளர் முகமது தாகாவின் மற்றொரு மகனான சையது ஜிலாமி, தனது நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
 
இதையடுத்து போலீஸார் சையதையும் அவரது நண்பர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற தந்தையிடமே மகன் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.