புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 4 நவம்பர் 2018 (12:17 IST)

சின்னத்திரை நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்

மெட்டி ஒலி, நாதஸ்வரம் மற்றும் கோலங்கள் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் தனது நகைச்சுவை நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நடிகர் விஜய்ராஜ் இன்று காலாமானார்.

திருமுருகன் இயக்கத்தில் சன் டீவியில் ஒளிப்பரப்பான மெட்டி ஒலித்தொடரில் வீட்டோட மாப்பிள்ளையாக அனைவரையும் நக்கலடிக்கும் கதாப்பாத்திரத்தின் மூலம் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். அந்த தொடரில் அவருடன் கூட நடித்த இயக்குனர் திருமுருகனுக்கு இவரின் நடிப்பு மிகவும் பிடித்து போனதால் அவர் அடுத்தடுத்து இயக்கிய தொடர்களில் இவருக்கு சிறப்பான வேடங்கள் கொடுத்தார்.

திருமுருகன் இயக்க்ய கோலங்கள் நாதஸ்வரம் ஆகிய தொடர்களிலும் நடித்த இவர் எம்டன் மகன் படத்திலும் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பழனியில் அவர் வீட்டில் இருந்த அவர் இன்று அவர் திடீரென மாரடைப்பால் இறந்தார். அவருக்கு வயது 43.