செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 3 நவம்பர் 2018 (14:43 IST)

கள்ளக்காதலியை உஷார் பண்ண கள்ளக்காதலன் செய்த வேலை

நெல்லையில் கள்ளக்காதலியை திருப்திபடுத்த கள்ளக்காதலன் நகைக்கடையே ஆட்டையை போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
நெல்லையில் கணேசன் என்பவன் மாரிமுத்தாள் என்ற பெண்ணுடன் கள்ளகாதலில் ஈடுபட்டு வந்துள்ளான். மாரிமுத்தாள் கணேசனிடம் அவ்வப்போது தங்க நகை வாங்கித் தாருங்கள் என கேட்டு வந்துள்ளார்.
 
கள்ளக்காதலியின் ஆசையை நிறைவேற்ற துடித்த கணேசன் உடனடியாக கள்ளக்காதலியை திருப்திபடுத்த முடிவு செய்தான். ஆனால் பாக்கெட்டில் காசில்லை.
 
உடனடியாக கரெக்டாக ஸ்கெட்ச் போட்டு நெல்லை பேருந்து நிலையம் எதிரே உள்ள நகைக்கடையில் நள்ளிரவில் புகுந்து அந்த கடையில் இருந்த நகை அனைத்தையும் திருடிக்கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டான்.
 
பின்னர் போலீஸார் அவனது வண்டி எண்ணை வைத்து அவனை பிடித்துவிட்டனர். அவனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.